Thursday, September 18, 2008

நிஜங்கள்

வான வெளியில் பறக்கும் பறவைகள்
கூட்டமாய் தவழும் வெண்மேகங்கள்
மெல்லிய நூல் கொண்டு உயரும் பட்டம்
தனதே என எண்ணும் வானின் திட்டம்

பொய்யானதே! பறவை கூடு சேர்ந்ததே
நூல் அறுந்ததும் பட்டம் கீழே போனதே
மேகங்கள் அந்த வானில் உரசிக்கொண்டதும்
மழையாய் மாறி பூமி தன்னை சென்று சேர்ந்ததே

அந்த வானம் மட்டும் தனிமையிலே நின்றுவிட்டது
மழையும் அதனை ஈரமாக்க மறுத்துவிட்டது
நம் வாழ்கைப் பயணம் ஒருவகையில் அந்த வானம் போன்று தான்
அதில் ஓவியம்தனை தீட்ட எண்ணும் ஆசை மனது தான்!!

No comments: