Showing posts with label sugame. Show all posts
Showing posts with label sugame. Show all posts

Wednesday, July 16, 2008

போதும் போதும் நண்பா!
நீ கொண்ட சோகங்கள் போதும்
கழிந்து விட்டன கடுமையான நாட்கள் இனி
உன் பாதையில் இனிமையான பூக்கள் ...

நீ கொண்ட துயரங்கள் போதும் - இனி
சந்தோஷம் உன் வாழ்வில் நிரம்பட்டும்!

நீ சந்தித்த தொல்லைகள் போதும் - அவை
அனைத்தும் தொலை தூரம் ஒழியட்டும்!

நீ அடைந்த ஏமாற்றங்கள் போதும் - உன்
கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்!

நீ கேட்ட சுடுசொற்கள் போதும் - இனி
மனதினில் உற்சாகம் பொங்கட்டும்!

நீ தவித்த தவிப்புகள் போதும் - இனி
வெற்றிகள் உன் பக்கம் குவியட்டும்!

நீ உதிர்த்த கண்ணீர்த்துளிகள் போதும் - இனி
ஒளிவெள்ளம் உன் கண்களில் ஒளிரட்டும்!

நீ மனதில் கொண்ட சுமைகள் போதும் - இனி
சுதந்திரமாய் உன் செயல்கள் இருக்கட்டும்!

நீ உணர்ந்த வலிகள் போதும் - இனி
வசந்தமாய் உன் வாழ்வு மலரட்டும்!

இனி எல்லாம் சுகமே! - இவ்வரிகள்
என்றுமே உன் செவியில் ஒலிக்கட்டும்!

இனிய மாற்றங்கள் இவை
நிரந்தரமாய் உன்னிடமே வசிக்கட்டும்!

kirukkal by,
Sakthi