ஓங்கி உயர்ந்த மலையாம்
வெண்பனி போர்த்திய நிலையாம்
ஈசனின் ஆவுடை வடிவாம்
திருக்கயிலாயம் என்னும் கிரியாம்!
அதை சுற்றிலும் பல இமயச் சிகரங்கள்
காலை சூரிய கிரணங்கள்
தொட்டவுடன் மற்றவை ஏதும் மாற்றமில்லை
கயிலை மட்டும் மாறியதுவே!
வெள்ளி மலையென இருந்த சிவம்
தங்கமென மாறும் அற்புதமே
பொன்னார்மேனியன் எனப் போற்றி
சிந்தையில் சிலிர்த்தேன் தினம்தினமே!
இறைவா கண் மூடி உனைத் தேடுகிறேன்
உன்னில் என்னை நான் காணுகிறேன்
ஒளியாய், நெருப்புக் குழம்பாய் தோன்றும்
நின் ஜோதியில் நானும் உயிர்த்தெழுந்தேன்!
என் சிறுமை அனைத்தும் தொலைந்தது
நின் பெருமை புரிந்ததும் கரைந்தது
மெய்ப்பொருள் நீயென தெரிந்ததும்
வாழ்கையின் சிறப்பு புரிந்தது!
No comments:
Post a Comment