Wednesday, September 10, 2008

லேசாக! மிக லேசாக!

கொத்துக்கொத்தாய்
பருத்திப் பஞ்சினைப்போல்
வெண் மேகக் கூட்டங்கள்
மிதந்து கொண்டிருந்தன
எனக்குக் கிழே!

பஞ்சினைவிடவும் லேசானதாய்
இருந்ததினாலோ
மேகத்தினை விடவும்
மேலே பறந்தது என் மனமும்
கூட நானும்!

புள்ளியாய் மறைந்து போயின
என் துயரங்களும், சந்தோஷங்களும்!

நிர்மலமான நீல வானம்
குடை பிடிக்க
சலனமின்றி ஓர் மோன நிலையில்
நான் இருக்க
சட்டென்று தெரிந்தது
மீண்டும் புள்ளிகளாய் நிதர்சனம்!

சிறிது சிறிதாய் பெரிதாகி
பூதாகாரமாய் நீண்டு
என்னை தனக்குள்
இருத்திக்கொண்டது
உண்மை உலகம்!

அத்துடன் முடிந்தது
என் விமானப் பயணம்!

மீண்டும் விடுதலை பெற்று
பறக்க துடிக்கிறது
என் விந்தை மனம்!

லேசாக! மிக லேசாக!

No comments: