நீ நீயானால்
நீயாகிய நீ யார்?
நீ இல்லா நீயில்
இருப்பது யார்?
அதை உணர்வது யார்?
நீயில் நீ இல்லாதபோது
நீயாகிற நீ போவதெங்கே?
அதை அறிந்தவர் யார்?
நீ அதை அறிய முற்படும்போது
நீ யார் என நீ உணர்வாய்!
நீ நீயிருந்து அகலும்போது
நீ போகுமிடம் புரியும்.
நீ கேள்வி கேட்கப்படுவாய்!
நீ அளிக்கும் பதில் கொண்டு
நீ போகும் திசை நிர்ணயிக்கப்படும்
நீ பிரம்மம் அறிவதும் அல்லது
மறுபடி நீயாவதும் அப்போதே!
கேட்கப்படும் அவ்வினாவும்
அதற்கான விடையும்
நீ நீயாக இருக்கும்போதே அறியலாம்!
இதுவே உன் தேடலுக்கு
முதற்படியை அமையும்!
யார்? என்ன? ஏன்? எப்படி?
விடை ஒவ்வொன்றாய் புரியும்!
தேடு!!!!!!!!!!
kirukkal, Sakthi
No comments:
Post a Comment