Friday, January 23, 2009

சமர்ப்பணம்!



பாலைவனத்தில் முதல் மழைத்துளி ....

மண்ணின் இறுக்கம் தளர்ந்தது 
நெகிழ்ந்தது .. கரைந்தது ....

சிறுதுளி பெருமழையாய் மாறியதில் 
வண்ண மலர் பூந்தோட்டம் !!!!

மண்ணிற்குச் செய்த அற்புதத்தினை 
மழைத்துளி அறிந்தது , உணர்ந்தது ...

அங்கு விளைந்த சந்தோஷப் பூக்களைக் 
கண்டு ரசித்து ஆரவாரம் இன்றி, 
அமைதியாய் மண்ணுள் 
கலந்துவிட்டது மழைத்துளி!

இனி, எண்ணிலடங்கா மலர்ச்செடிகள் 
அம்மண்ணிலே தோன்றலாம் …

அவை அனைத்தும், 

அந்த முதல் துளிக்கே சமர்ப்பணம்! 

No comments: