அன்புத் தோழியே!
விரிசல் கண்ட நிலத்தகதே
பரிசெனப் பெய்த மழை நீ!
கள்ளி செடிகள் கண்ட பாலைவனத்தே
பூத்த ஒற்றை அரிய குறிஞ்சி நீ!
சுயம் பற்றி மட்டுமே யோசிக்கும்
கூட்டத்தின் நடுவே
நட்புக்கோர் இலக்கணம் வாசிக்கும்
என் நேசமிகு தோழி நீ!
கற்றது கை மண் அளவே என
அடக்கமாய் நீ சொன்னபோது தான்
நான் கற்றது அதில் ஒரு துகளே
என உணர்ந்தேன்!
பொருளுணர்ந்து கற்றதை
நீ பேசும் வார்த்தைகளை
கேட்ட போது தான்
நான் நுனிப்புல் மேய்ந்திருந்தேன்
என அறிந்தேன்
சுற்றி நடப்பதை கூட அறியாது
கனவுலகில் சஞ்சரிக்கும் மனிதர்கள் பலர்
ஆயின், தொலைநோக்கிப் பார்த்தும்
மற்றும் சீர்த்தூக்கி ஆய்ந்தும், பேசும்
செறிந்த உன் அறிவை வியந்தேன்
நான் சிரித்து மகிழ்ந்த போதும்
கண்ணீர் சிந்தி வருந்திய போதும் மட்டுமல்ல
என் தோழியே!
நான் வாய்மொழியா வார்த்தைகளும்
மனம் பேசிய எண்ணங்களும் கூட
புரிந்து கொண்டு
இன்று வரை தோள் கொடுத்தாய்!
இது நம் இறுதி வரை தொடரட்டும்!
நம் மனங்கள் சிறிது மகிழட்டும்!
என் சந்தோஷங்களையும் துயரங்களையும்
அறிந்தவள் நீ!
என் கோபங்களையும், உளறல்களையும்
பொறுத்தவள் நீ!
என் திறமைகளையும், முயற்சிகளையும்
பாராட்டியவள் நீ!
என் அறியாமையையும், தவருவகளையும்
சுட்டித் திருத்தியவள் நீ!
உனைப்பற்றிய எண்ணங்களைக்
கவிதை வடிக்கத் தமிழில்
நான் அறிந்த வார்த்தைகளோ வெகு சில!!
உயரிய உன் நட்பைப் பெற
அருளிய இறைவனுக்கு என் நன்றிகள் பல!!!
kirukkal by
sakthi
No comments:
Post a Comment