Friday, August 8, 2008

உன்னை நீ நேசி .......

நேசம், அன்பு, பாசம்

நம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம்


கனிவு, காதல், பரிவு

அம்மா, அப்பா, சுற்றம்,


உன் மீது அக்கறை கொண்ட நண்பர்கள்

சத்தியம், கோவில், தெய்வங்கள்


இவற்றில் ஒன்றனுக்காவது

முழுமையான அர்த்தம் உணர்ந்திருந்தால்


வன்முறை, கொலை, தீவிரவாதம்

இதை நீ செய்திருக்க மாட்டாய்!


போகட்டும் ,

உன்னையாவது நீ நேசி !!!!!

Sunday, August 3, 2008

Dedicated to my friend!!!

அன்புத் தோழியே!
விரிசல் கண்ட நிலத்தகதே
பரிசெனப் பெய்த மழை நீ!
கள்ளி செடிகள் கண்ட பாலைவனத்தே
பூத்த ஒற்றை அரிய குறிஞ்சி நீ!
சுயம் பற்றி மட்டுமே யோசிக்கும்
கூட்டத்தின் நடுவே
நட்புக்கோர் இலக்கணம் வாசிக்கும்
என் நேசமிகு தோழி நீ!

கற்றது கை மண் அளவே என
அடக்கமாய் நீ சொன்னபோது தான்
நான் கற்றது அதில் ஒரு துகளே
என உணர்ந்தேன்!
பொருளுணர்ந்து கற்றதை
நீ பேசும் வார்த்தைகளை
கேட்ட போது தான்
நான் நுனிப்புல் மேய்ந்திருந்தேன்
என அறிந்தேன்
சுற்றி நடப்பதை கூட அறியாது
கனவுலகில் சஞ்சரிக்கும் மனிதர்கள் பலர்
ஆயின், தொலைநோக்கிப் பார்த்தும்
மற்றும் சீர்த்தூக்கி ஆய்ந்தும், பேசும்
செறிந்த உன் அறிவை வியந்தேன்

நான் சிரித்து மகிழ்ந்த போதும்
கண்ணீர் சிந்தி வருந்திய போதும் மட்டுமல்ல
என் தோழியே!
நான் வாய்மொழியா வார்த்தைகளும்
மனம் பேசிய எண்ணங்களும் கூட
புரிந்து கொண்டு
இன்று வரை தோள் கொடுத்தாய்!
இது நம் இறுதி வரை தொடரட்டும்!
நம் மனங்கள் சிறிது மகிழட்டும்!

என் சந்தோஷங்களையும் துயரங்களையும்
அறிந்தவள் நீ!
என் கோபங்களையும், உளறல்களையும்
பொறுத்தவள் நீ!
என் திறமைகளையும், முயற்சிகளையும்
பாராட்டியவள் நீ!
என் அறியாமையையும், தவருவகளையும்
சுட்டித் திருத்தியவள் நீ!

உனைப்பற்றிய எண்ணங்களைக்
கவிதை வடிக்கத் தமிழில்
நான் அறிந்த வார்த்தைகளோ வெகு சில!!
உயரிய உன் நட்பைப் பெற
அருளிய இறைவனுக்கு என் நன்றிகள் பல!!!

kirukkal by
sakthi






நட்புக்காக!!!!!

யார் யார் முகமறியோம்
எவர் எங்கே தானறியோம்
ஆனாலும் கணினி மூலம்
அறிமுகம் தான் நன்றே ஆனோம்
auckland முதல் aandipatti வரை
சென்னையிலிருது chicago வரை
நட்பு நம்மை இணைத்தது
மகிழ்ச்சியில் மனம் திளைத்தது!
அறுவை ஜோக்ஸ் முதல்
ஆத்மா பற்றிய தலைப்பு வரை
அனைத்தும் பேசினோம்
அலசி ஆராய்ந்தோம்!
தொலைந்து நட்பும்
சிலர் கண்டு கொண்டோம்
அருமை நண்பர்கள்
புதியதாய் கிடைக்கப்பெற்றோம்!
பழுதில்லா நட்புக்கோர்
இலக்கணமாய் மாறி நின்றோம்
நமது நட்பு வட்டம்
இன்னும் விரியட்டும்!
இன்று போல் என்றும் தொடரட்டும்!

kirukkal by
sakthi